Breaking News

ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ரயில்வே போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் கைது

அட்மின் மீடியா
0

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்த நபர் ரயில்வே போலீசாரால் தேடப்பட்டு வந்த நபர் கைது



கேரள மாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு கடந்த 26-ஆம் தேதி வந்த விரைவு ரயிலில் பெண் மென்பொறியாளா் பயணித்துள்ளாா். அந்த ரயில்  ரயில் வேலுார் அடுத்த காட்பாடி பகுதியை கடந்தபோது, ஐ.டி.,பெண் ஊழியரிடம் இருந்த மொபைல் போனை, அதே ரயிலில் பயணித்த வாலிபர் ஒருவர் பறித்துக் கொண்டு ஓடியுள்ளார்.

அவரை விரட்டி சென்ற ஐ.டி., பெண் ஊழியரை, அந்த நபர் மேலும் இருவருடன் இணைந்து, ரயில் கழிப்பறைக்குள் தள்ளி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.பின்னர், அந்த நபர்கள் வேறு பெட்டிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. 

ரயில் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்ததும் மென்பொறியாளர் ரயில்வே பாதுகாப்பு படையிடம் நடந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்தார்.

இது தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தப்பி ஓடிய மூன்று பேரை பிடிக்க, நான்கு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படையிலும், 20 போலீசார் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை வந்த ஓடும் ரயிலில் பெண் என்ஜினியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண் அடையாளம் காட்டிய ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இது குறித்து தமிழக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில்


படத்தில் உள்ளவர் குற்றவழக்கில் ரயில்வே காவல்துறையினரால் தேடப்பட்டு வருகிறார். தகவல் அளிப்பவருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் தொடர்புக்கு 

Chennai, Helpline - 9962500500, 

Control -9498101950, 

SB Office – 9498136719, 

DSRP/Chennai Central – 9444115461, 

DSRP/Egmore – 9443007015

இந்நிலையில் சென்னை ஓஎம்ஆர் பகுதியில் தங்கியிருந்த கிஷோர் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்

போலீசார் விசாரனையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர் கிஷோர் ரயிலில் ​​ஐ.டி. பெண் ஊழியரை பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். முன்னதாக இளைஞரின் புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றி தகவல் தெரிவிப்போருக்கு சன்மானம் அளிக்கப்படும் என ரயில்வே காவல்துறை அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback