Breaking News

செவ்வாய் கிரகத்தில் பாறைகளுக்கு கீழ் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது நாசா ஆராய்ச்சியில் புதிய தகவல்கள்

அட்மின் மீடியா
0
செவ்வாய் கிரகத்தின் வெளிப்புற கிரஸ்ட்டில் இருக்கும் பாறைகளின் ஆழத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


செவ்வாயில் உறைந்த நீர் இருப்பது மற்றும் வளிமண்டலத்தில் நீராவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்தக் கிரகத்தில் திரவ நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.




குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்–தில் என்ன இருக்கிறது என்பது பற்றி ஆராய்ச்சி பணிகளை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக  நாசா கடந்த 2018 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மார்ஸ் இன்சைட் லேண்டர் என்னும் விண்கலத்தை அனுப்பியது. இன்சைட் லேண்டர் விண்கலத்தில் ஒரு நில அதிர்வு அளவீட்டு கருவி பொருத்தப்பட்டிருந்தது. அந்த கருவி கடந்த 4 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தின் நில அதிர்வுகளை பதிவு செய்தது. 

அதாவது நான்கு வருடங்களாக செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பின் ஆழத்தில் இருந்த நில அதிர்வுகளை இந்த கருவி பதிவு செய்துள்ளது.

அந்த நில அதிர்வுகளை பகுப்பாய்வு செய்த போது, அந்த கிரகம் எவ்வாறு நகர்கிறது என்பது தெரிந்தது, மேலும், திரவ வடிவிலான நீரின் நில அதிர்வு சமிக்ஞைகளை விஞ்ஞானிகள் கவனித்தனர்.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 11 முதல் 20 கிலோ மீட்டர் வரை அமைந்துள்ள இந்த நீர் உடைந்த பாறைகளுக்குள் இடையில் தேங்கி நிற்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback