Breaking News

குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென குரங்கு போன்று தாவிய நிகழ்வு என பரவும் வீடியோ உண்மை என்ன

அட்மின் மீடியா
0

குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென குரங்கு போன்று தாவிய நிகழ்வு என பரவும் வீடியோ உண்மை என்ன

பரவிய செய்தி:-

சிவகங்கை மாவட்டத்தில் குரங்கு கடித்து சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென குரங்கு போன்று தாவிய நிகழ்வு என ஓர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது

உண்மை என்ன:-

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி பாதுகாவலரை தாக்கி, இரும்பு கதவின் மீது ஏறி குரங்கு வித்தை காட்டியதால் பரபரப்பு என பிரபல தமிழ் டிவியான தந்தி தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது அதில்:-


சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்தவர் சரவணன். இவர்  மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்

இந்நிலையில் நேற்று காளையார்கோயில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சரவணனை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

அங்கு சென்ற அவர் ஆம்புலன்ஸில் இருந்து இறங்க மறுத்துள்ளார் மேலும் அங்கிருந்த கேட்டில் ஏறி ஆவேசமாக கத்தியுள்ளார் உடனடியாக அங்கிருந்த  பாதுகாவலர்கள் அவர் கைகளை கட்டி சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 தந்தி டிவி வெளியிட்டுள்ள செய்தி வீடியோ பார்க்க

https://www.youtube.com/watch?v=uzQwYsB5D8o

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

 

Tags: FACT CHECK இந்திய செய்திகள் மறுப்பு செய்தி வைரல் வீடியோ

Give Us Your Feedback