Breaking News

கிருஷ்ணகிரியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது

அட்மின் மீடியா
0
கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (32). இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். 




இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 9ஆம் தேதி கலையரங்கில் பயிற்ச்சிக்காக தங்கவைக்கப்பட்டிருந்த பெண்கள் இருந்த அறையில் அதிகாலை  அங்கு வந்த  சிவராமன் 12 வயது சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது குறித்து அம்மாணவி தன் பெற்றோரிடம் கூற அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் சிவராமன் மீது கந்திக்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் சதீஸ் குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன் என்.சி.சி. பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சிவராமன், என்.சி.சி. பயிற்சியாளர் சுதாகர் இருவரையும் பிடிக்க 4 தனிப்படை போலீசார் கொண்ட குழு அமைக்கப்பட்டு தேடி வந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த சிவராமனை கைது செய்தனர் தனிப்படை போலீசார். மேலும் சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்ய முயன்ற போது தப்பி ஓட முயன்றதில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்நிலையில் சிவராமனைக் கட்சியில் இருந்து நீக்கி  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாகச் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்த கா.அ.சிவராமன் (30357937718) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback