Breaking News

திருமாவளவன் குறித்து ஆபாச பதிவு- நாம் தமிழர் கட்சி பிரமுகர் மீது வழக்குப்பதிவு

அட்மின் மீடியா
0
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து சாதி ரீதியாக X தளத்தில் அவதூறான பதிவுகளை பதிவிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செல்வகாந்தன் மற்றும் அவரது மனைவி சந்தரப்பிரியா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்

இதுதொடர்பாக திருச்சி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

திரு. A.K. தமிழாதன் (எ) கமலதுரை என்பவர் திருச்சிராப்பள்ளி மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளரிடம் கொடுத்த புகாரின்படி, 23.08.2024-ஆம் தேதி X-வலைதளத்தை பார்த்த போது, ColinRoy (@RoyKuma90313394) என்ற நபர் தனது X Page-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.தொல் திருமாவளவன், அவர்களை ஆபாசமாகவும், அவதூறு பரப்பும் வகையிலும், அருவருக்கதக்க வார்த்தையில் பதிவிட்டுள்ளார். 



பின்னர் அத்தகைய X Page-ஐ பற்றி விசாரித்த போது, நாம் தமிழர் கட்சியை சார்ந்த செல்வகாந்தன் என்றும், சென்னை அண்ணாநகர் வசந்தம் காலனியை சேர்ந்தவர் என்றும் அவரது மனைவி சாந்திப்ரியா என்றும் தெரியவந்துள்ளது. 

இவர்கள் இருவரும் மேற்படி X Page-ல் பல அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துகளை பதிவிடுவதுடன் திரு.தொல்.திருமாவளவனை பட்டியில் இனத்தை சார்ந்தவர் என அறிந்தும் அவரை இழிவுபடுத்தியுள்ளனர். மேலும் வி.சி.க-வை சேர்ந்த ஸ்நேகா என்ற பெண்ணையும், மற்றுமொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் விதமாக, தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் சிலருடன் ஒரு பெண் நிற்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு ஆபாசமாகவும் அருவருக்கதக்க வகையிலும் பெண் என்று பாராமல் பதிவிட்டுள்ளனர் என ஒரு புகார் அளித்தார்.r

இந்தகைய பதிவுகளை பதிவிடுவதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் மற்றவர்களுக்கும் பகைமையை ஏற்படுத்தி, கலவரத்தை தூண்டி, பொது அமைதியை, குலைக்கும் செயலை கனடாவில் இருந்து கொண்டு செல்வகாந்தன் மற்றும் மனைவி சாந்திபிரியா செய்துவருகின்றனர். மேலும் சாந்திபிரியா இலங்கை நாட்டை சேர்ந்தவர் என்றும், இலங்கையை சேர்ந்த அவருக்கு போலியாக இந்தியன் Passport தயார் செய்து கொடுத்து, அவரை கனடா நாட்டிற்கு சட்டத்திற்கு புறம்பாக செல்வகாந்தன் அனுப்பியுள்ளார் எனவும் புகார் ஒன்றை அளித்தார்.

மேற்படி நபர்கள் இருவரும் விசிக தலைவர் தொல் திருமாவளவன், பட்டியிலினத்தவர் என்று தெரிந்தும் உள் நோக்கத்துடன், அவரையும், விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்களையும் இழிவுபடுத்தும் விதமாகவும், பதிவிட்டுள்ளதாகவும், விசிக கட்சிக்கும் மற்ற அமைப்புகளுக்கும் பகைமை உணர்வை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. 

எனவே, மேற்படி ஆபாச பதிவுகளை பதிவு செய்த செல்வகாந்தன், அவரது மனைவி சாந்திபிரியா மற்றும் அவருக்கு உதவியாக இருக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி, மேற்படி புகார்தாரர் 23.08.2024-ம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் செல்வகாந்தன் மற்றும் சாந்திபிரியா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

காவல் துறை அறிக்கை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1827033785114017962

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback