Breaking News

ஆகஸ்டு 30 ம் தேதி பாஜகவில் இணைகிறார் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பாஜகவில் இணைகிறார் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி பாஜகவில் இணைகிறார் என ஜார்கண்ட் பாஜக தேர்தல் பொறுப்பாளருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.



ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கடந்த பிப்.ரவரி மாதம் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார்.அப்போது ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். 

சுமார் 5 மாதங்கள் அவர் முதல்வராக இருந்தநிலையில் ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் இறுதியில் ஜாமீன் கிடைத்த நிலையில், சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியில் இருந்து சம்பாய் சோரன் விலக வேண்டியிருந்தது.

இந்நிலையில் கடந்த சிலநாட்களாக புதிய கட்சி தொடங்கலாம் என ஆலோசனையில் இருந்த அவர் தற்போது பாஜகவில் இணைகின்றார் என தகவல் வெளியாகி உள்ளது

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ள சாம்பாய் சோரன் 

அதனை தொடர்ந்து "ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், புகழ்பெற்ற பழங்குடியின தலைவருமான சாம்பாய் சோரன் சற்று நேரத்திற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவர் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி ராஞ்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைவார் என்று ஜார்கண்ட் பாஜக தேர்தல் பொறுப்பாளர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback