Breaking News

மெட்ரோ பணியின்போது எடை தாங்காமல் கிரேன் சரிந்து விபத்து வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0
மெட்ரோ பணியின்போது எடை தாங்காமல்  கிரேன் சரிந்து விபத்து வைரல் வீடியோ

குஜராத் மாநிலம் சூரத்தில் மெட்ரோ பணியின்போது எடை தாங்காமல்  கிரேன் சரிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்து விபத்து  இதில் வீட்டின் முன்பக்கம்  சேதமடைந்தது.



இரு கிரேன்கள் மூலம் இரும்பு கர்டரை தூண் மீது ஏற்ற முயன்றபோது, எடை தாங்க முடியாமல் ஒருபக்க கிரேன் சரிந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து மறுபக்கம் இருந்த கிரேனும் சரிந்ததில் அருகே இருந்த வீட்டின் மீது இரும்பு கர்டர் விழுந்தது. 

இதில் வீட்டின் முன்பக்கம் முழுவதுமாக சேதமடைந்தது.நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கிரேன் விழுந்த அந்த பங்களாவில் ஆள் இல்லை ,லேசான காயங்களுடன் கிரேன் ஆப்பரேட்டருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1827191495000244637

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback