Breaking News

இந்திய அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் வக்பு வாரியத்திற்க்கு சொந்தம் ஆகாது மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் burhanpur waqf case

அட்மின் மீடியா
0

இந்திய அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள் வக்பு வாரியத்திற்க்கு சொந்தம் ஆகாது மத்திய பிரதேச உயர்நீதிமன்றம்

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூர் கோட்டை வளாகத்தில் உள்ள அரண்மனை, ஷா ஷுஜாவின் கல்லறை, நாதிர் ஷாவின் கல்லறை,பிபீ சாஹிம் மசூதி ஆகியவை அமைந்துள்ளன. இவை அனைத்தும் பாதுகாக்கப்பட்ட நினைவுசின்னங்கள் என இந்திய தொல்லியல் துறை அதனை பாதுகாத்து நிர்வகித்து வருகின்றது.

 


இந்நிலையில் கடந்த 2013 ம் ஆண்டு ஷா ஷுஜாவின் கல்லறை, நாதிர்ஷாவின் கல்லறை, பீபி சாஹிப்பின் மசூதி மற்றும் புர்ஹான்பூர் கோட்டையில் அமைந்துள்ள அரண்மனை ஆகிய அனைத்தும் வக்பு வாரியத்துக்குச் சொந்தமான இடம் என வக்ப் வாரியம் அறிவித்தது.

அந்த அறிவிப்பை எதிர்த்து இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) சார்பாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது

மேலும் அந்த மனுவில் பண்டைய நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம், 1904-ன் கீழ் முறையாக அறிவிக்கப்பட்ட ஒரு பழமையான மற்றும் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும், எனவே வக்ஃப் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி 19.07.2013 தேதியிட்ட உத்தரவை ரத்து செய்யவேண்டும் என அதில் குறிப்ப்டப்பட்டது

வழக்கை விசாரித்த நீதிமன்றம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மனுதாரர் ஏஎஸ்ஐயின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் பல்வேறு பழங்கால நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் உள்ளன, அவை நாட்டின் பண்டைய காலம் மற்றும் வரலாற்றின் புகழ்பெற்ற பாரம்பரியமாகும்

புர்ஹான்பூர் கோட்டையில் அமைந்துள்ள ஷா ஷுஜாவின் கல்லறை, நாதிர் ஷாவின் கல்லறை, பீபி சாஹிப்பின் மசூதி ஆகியவை பழமையான மற்றும் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள்.

இவை முஸ்லிம்கள் காலத்தில் கட்டப்பட்டவையாகும். இவை யாவும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் என அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கட்டுப்பாட்டின் கீழ் 1913,1925-ம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டுள்ளன. பழங்கால நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவை ஏஎஸ்ஐ பராமரிப்பில் உள்ளன. இதற்கு ஆதாரங்கள் உள்ளன.

ஆனால், இது வக்பு வாரியச் சொத்துகள் என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. என தீர்ப்பு அளித்தார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback