Breaking News

சென்னை டூ நாகர்கோவில், மதுரை டூ பெங்களூரு - வந்தே பாரத் ரயில் நேரம் முழு விவரம் இதோ chennai to nagercoil , madurai to bangalore vande bharat time table

அட்மின் மீடியா
0

சென்னை டூ நாகர்கோவில், மதுரை டூ பெங்களூரு - வந்தே பாரத் ரயில் நேரம் முழு விவரம் இதோ chennai to nagercoil , madurai to bangalore vande bharat time table

சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு மற்றும் மீரட் – லக்னோ ஆகிய மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று 31.08.2024 கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இதன்மூலம் தமிழகத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் மொத்த எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. 


Prime Minister Narendra Modi flagged off Vande Bharat trains on three routes namely Chennai – Nagercoil, Madurai – Bengaluru and Meerut – Lucknow today 31.08.2024. With this, the total number of Vande Bharat trains operated in Tamil Nadu has increased to seven.

சென்னை எழும்பூர் to நாகர்கோவில் வந்தேபாரத் ரயில்  

வண்டி எண் – 20627 சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் நெல்லைக்கு மதியம் 12.30 மணிக்கு வந்து, 12.32 புறப்படுகிறது. நாகர்கோவிலை 1.50 மணிக்கு சென்றடைகிறது.

அதேபோல் மறுமார்க்கத்தில் வண்டி எண் – 20628 நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 3.18 மணிக்கு வந்து, 3.20 மணிக்கு புறப்படுகிறது. சென்னைக்கு இரவு 11 மணியளவில் சென்றடையும் 

சென்னை to நாகர்கோவில் வந்தேபாரத் ரயில் விழுப்புரம், திருச்சி, மதுரையில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மதுரை  to பெங்களூரு வந்தே பாரத் ரயில் 

வண்டி எண் – 20671 மதுரையில் இருந்து அதிகாலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூரு கண்டோன் மென்ட் நிலையத்தை மதியம் 1 மணிக்கு சென்றடையும்

அதேபோல் மறுமார்க்கத்தில் வண்டி எண் – 20672 பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு இரவு 9.45 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த ரயில் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback