Breaking News

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது Founder of Telegram Paveldurov has been arrested in France.

அட்மின் மீடியா
0
BIG BREAKING NEWS :- டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸ் போலீசாரால் கைது

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் என்பவர் அதிரடியாக பிரான்ஸ் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.




துபாயை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் இந்த செயலியை ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பாவல் துரோவ், 39, என்பவர் நிறுவினார். மேலும் இவர் பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் இரட்டை குடியுரிமையை பெற்றவர்.

டெலிகிராம் செயலியில் குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும் அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஏற்கனவே அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கில் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அதன் அடிப்படையில் டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

டெலகிராம் சிஇஓ பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த செயலிக்கு தடை விதிக்கப்படுமா என்ற தகவல் வெளியாகி உள்ளது

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback