Breaking News

பள்ளிகளில் இனி GOOD MORNINGக்கு பதிலாக ஜெய் ஹிந்த்.. ஹரியானா அரசு அறிவிப்பு No good morning only Jai Hind in Haryana schools

அட்மின் மீடியா
0

பள்ளிகளில் இனி GOOD MORNINGக்கு பதிலாக ஜெய் ஹிந்த்.. ஹரியானா அரசு  அறிவிப்பு No ‘good morning’, only ‘Jai Hind’ in Haryana schools



பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் GOOD MORNING, GOOD AFTERNOON கூறி வணக்கம் சொல்வதற்கு பதில், இனி 'ஜெய் ஹிந்த்' எனக் கூற வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் ஹரியானா பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது! மேலும் மாணவர்கள் மனதில் தேசப்பற்றை ஆழமாக விதைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் Good Morning என்று சொல்வதற்கு பதில் 'ஜெய்ஹிந்த்' என்றே சொல்ல வேண்டும் என உத்தரவு

அரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இனி குட் மார்னிங் கூற வேண்டாம் அதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று கூறுங்கள் என பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி இருக்கின்றது.

இது தொடர்பாக அவர்கள் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது 

தேசப்பற்று நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இனி பள்ளிகளில் காலை குட் மார்னிங்-க்கு பதிலாக ஜெய்ஹிந்த் என சொல்ல மாணவர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போது மாணவர்களிடையே ஒரு ஒற்றுமை உணர்வை ஏற்படும். தேசத்தின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் தியாகங்கள் பற்றி அறிந்து கொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின் போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட "ஜெய் ஹிந்த்முழக்கம் பிராந்திய மற்றும் கலாச்சார வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையைக் குறிக்கிறது

புதிய வாழ்த்து மாணவர்களை தேசிய ஒருமைப்பாடு, இந்திய வரலாற்றின் மீதான மரியாதை மற்றும் அவர்களின் அடையாளம் மற்றும் தேசத்திற்கான சாத்தியமான பங்களிப்புகளை தினசரி நினைவூட்டல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது.

தேசத்தை கட்டி எழுப்புவதில் மாணவர்களின் எதிர்கால பங்கை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களும், சக ஊழியர்களுக்கு வணக்கம் என்று கூறுவதற்கு பதிலாக ஜெய்ஹிந்த் என்று சொல்லத் துவங்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback