Breaking News

அஞ்சல்துறை வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்க்கு முடிவுகள் வெளியாகி உள்ளது ரிசல்ட் செக் செய்வது எப்படி? India Post GDS Result 2024

அட்மின் மீடியா
0

அஞ்சல்துறை வேலை வாய்ப்புக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்க்கு முடிவுகள் வெளியாகி உள்ளது ரிசல்ட் செக் செய்வது எப்படி? India Post GDS Result 2024 

தமிழக அஞ்சல் துறையில் 10 ம் வகுப்பு படித்தவர்களுக்கான Gramin Dak Sevaks பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது 

அதன்படி அஞ்சல் கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 44228  அஞ்சல் பணியிடங்களுக்கான முதற்கட்டத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது

இந்த பதவிக்கு, எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல் 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merti List) தயாரிக்கப்பட்டுள்ளது

இந்திய அஞ்சல் துறை அங்கீகரிக்கப்பட்ட https://indiapostgdsonline.gov.in/ என்ற முகவரிக்கு செல்லவும்.

Shortlist candidates என்ற பிரிவில், தமிழ்நாடு என்பதை கிளிக் செய்யவும்.

அதனைத்தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும். 3,789 பேரின் தரவுகளில் உங்களின் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்து கொள்ளவும்.

சான்றிதழ் சரிபார்ப்பு :உங்களுடைய பெயர் முடிவுகள் வெளியான பட்டியலில் இடம்பெற்று இருந்தால், அடுத்தக்கட்டமாக நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவர். 

முடிவுகளை சரிபார்ப்பது எப்படி?

விண்ணப்பித்தவர்கள் indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

அதில் Shortlist candidates என்பதை செலக்ட் செய்து அதில்  தமிழ்நாடு என்பதை தேர்ந்தெடுங்கள்

அடுத்து அதில் உள்ள short listed candidates பெயர் பட்டியல் திரையில் தோன்றும். அதில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்த்து கொள்ளுங்கள்

மேலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதிப் பட்டியலில் இடம் பிடித்தவர்களின் தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) வாயிலாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு தேதி மற்றும் இடம் குறித்த விவரங்கள் SMS மற்றும் இமெயில் முகவரியில் தெரிவிக்கப்படும். இரண்டு கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்பு உங்களுக்கு பணி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://indiapostgdsonline.gov.in/

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback