ஏன் திருமணம் செய்யவில்லை என்று அடிக்கடி கேட்ட பக்கத்துவீட்டு முதியவரை அடித்து கொன்ற நபர் முழு விவரம் Indonesian man kills neighbour
ஏன் திருமணம் செய்யவில்லை என்று அடிக்கடி கேட்ட பக்கத்துவீட்டு முதியவரை அடித்து கொன்ற நபர் முழு விவரம்
இந்தோனேஷியாவில் வசித்துவந்த சிரேகர் பக்கத்து வீட்டில் வசித்த அசிம் இரியாண்டோ சிரேக்கை பார்க்கும்போதெல்லாம் வயது ஆகின்றது ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறாய்? என்று கேட்டுள்ளார் இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிரேக் கடந்த ஜுலை 29 ஆம் தேதி அன்று கோபத்துடன் அசிமை மரக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சிரேக்கை தடுத்துள்ளனர்.இதனையடுத்து, அசிமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்
சிரேக் உடனடியாக கைது செய்யப்பட்டார். அப்போது அவர் திருமணம் குறித்து அவர் தொடர்ந்து கேள்வி கேட்டு, என்னை கேலி செய்ததால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். இதனால்தான், அவரை கொன்றேன். " என்று தெரிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்