Breaking News

மத்திய அரசின் உயர் பதவிகளில் லேட்டரல் என்ட்ரி முறை ரத்து மத்திய அரசு அறிவிப்பு Lateral Entry cancel

அட்மின் மீடியா
0

மத்திய அரசின் உயர் பதவிகளில் லேட்டரல் என்ட்ரி முறை ரத்து மத்திய அரசு அறிவிப்பு

 



மத்திய அரசின் உயர் பதவிகளான இணைச் செயலர்கள், இயக்குநர்கள், துணை செயலாளர்கள் உள்ளிட்ட 45 பணி இடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் அதிகாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பினை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அண்மையில் வெளியிட்டிருந்தது. 

ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற நேரடி நியமனங்கள் நடைபெற்று வந்துள்ளன. லேடரல் என்ட்ரி முறையில் இதுவரை 63 பேர் முக்கியப் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பதவிகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியமர்த்துவதுதான் வழக்கம். ஆனால் தற்போது அந்த பதவிகளுக்கு நேரடி நியமனம் நடத்தினால், தற்போது ஐ.ஏ.எஸ் முடித்துவிட்டு அதிகாரிகளாக வேலை பார்த்துவருபவர்கள் எதிர்காலத்தில் மத்திய அரசின் உயர்பதவிகளுக்குச் செல்லும் வாய்ப்பு பறிக்கப்படுவதாக கூறப்படுகின்றது

மத்திய அரசின் உயர்பதவிகளில் லேட்டரல் என்ட்ரி என்பது இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதி மீது நடத்தப்படும் தாக்குதல் என்று ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில் நேரடி அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து யு.பி.எஸ்.சி அமைப்பின் தலைவருக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுதியுள்ள கடிதத்தில், வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நேரடி நியமன நடைமுறை இருக்க வேண்டும் என்பதில் பிரதமர் உறுதியாகவுள்ளார். அதனால் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback