Breaking News

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் லைவ் LIVE TVK Flag

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் லைவ் LIVE TVK Flag

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்யவுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்இது குறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-



என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.

சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.

தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி. கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம். என தெரிவித்துள்ளார்

தேதி- 22.08.2024 வியாழக்கிழமை நேரம் காலை 9.15 மணி முதல் இடம்: தலைமை நிலையச் செயலகம், பனையூர், சென்னை-600119

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் லைவ் LIVE TVK Flag

Spark Media Click Here

https://www.youtube.com/watch?v=Go3ivTIg6cw

polimer Tv Click Here

https://www.youtube.com/watch?v=iQOWc3fgBZA

NewsTamil 24X7 Click Here

https://www.youtube.com/watch?v=mlI6cBjMNLA

Thanthi TV Click Here

https://www.youtube.com/watch?v=JMu3wfk4K0I


தமிழக வெற்றிக் கழகம் உறுதிமொழி 

நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி. மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். 

சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback