Breaking News

குரங்கம்மை நோய் தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் இந்தியா முழு விவரம் Monkeypox vaccine Serum India

அட்மின் மீடியா
0

குரங்கம்மை நோய் தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் சீரம் இந்தியா 

குரங்கம்மை நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது சீரம் இந்தியா நிறுவனம்! 

குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தாண்டு இறுதிக்குள் சீரம் இந்தியா நிறுவனம் உருவாக்கும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

 


ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், குரங்கம்மை காய்ச்சல் பொது சுகாதார அவசரகால நிலையாக உருவாகி உள்ளது. 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அதனால், இதனை தடுத்து நிறுத்த சர்வதேச உதவி வேண்டும் என கேட்டு கொண்டுள்ளது. இந்நிலையில் குரங்கம்மை பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. 

ஆப்ரிக்க நாடான காங்கோவில் பரவி வந்த குரங்கம்மை தொற்று, தற்போது ஐரோப்பிய நாடுகளிலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் பரவி உள்ளது. 

இந்நிலையில் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை குரங்கம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் வருபவர்களை கையாள்வது குறித்த நிலையான வழிகாட்டு நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

குரங்கு அம்மை என்றால் என்ன:-

குரங்கு அம்மை Monkeypox  என்னும் தொற்றுநோய். இந்நோய் அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, உடலில் தசை வலி, நெறிகட்டுதல், களைப்பாக உணர்தல் போன்றவையாகும்.இதனைத்தொடர்ந்து கொப்புளம், தடிப்புகள் போன்றவை தோன்றலாம். அதன்பின் பல்வேறு கட்டங்களாக உருவெடுத்து சிரங்கு உண்டாகும். அதன்பின் அது மறைந்துவிடும். 

ஆனால் கொப்பளங்கள் தழும்பை ஏற்படுத்தலாம்.பொதுவாக இந்த தொற்று 14 - 21 நாட்களில் தானாக சரியாகிவிடும். எனினும் சில நேரங்களில், இது தீவிர பாதிப்புகளை உண்டாக்கும். 

தடுப்பூசி:-

mpox நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் இந்திய சீரம் நிறுவனம் தற்போது செயல்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வருட காலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா கூறியுள்ளார்

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback