Breaking News

ரயில் நிலையங்களில் இனி டிஜிட்டல் முறையில் QR கோடு மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்

அட்மின் மீடியா
0

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கும் பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 78 நிலையங்களிலும் QR குறியீடு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத அனைத்து டிக்கெட் கவுன்டர்களிலும் நிறுவப்பட்டுள்ள QR குறியீட்டு சாதனங்கள் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பணமில்லா பரிவர்த்தனைகளை செய்வதன் மூலம் பயணிகள் சிரமமின்றி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்

இதன்மூலம் இது BHIM, Paytm, GPay, Phonepe, போன்ற பல டிஜிட்டல் ஆப் மூலம் பயணிகள் தடையற்ற பரிவர்த்தனை செய்யலாம்.

 

ரயில்வே துறையில் ரயிலில் பயணம் செய்யும் டிக்கெட் கட்டணத்தை டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதியை அறிமுகம் செய்து வருகிறது. ஒவ்வொரு ரயில்வே கோட்டம் வாரியாக இந்த நடைமுறை செயல்பாட்டிற்கு வர தொடங்கி உள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback