Breaking News

ஸ்கோடா காரின் பெயரை சரியாக கண்டு பிடித்து புத்தம் புதிய காரை பரிசாக வென்ற குரான் ஆசிரியர் முழு விவரம் quran Teacher Wins Skoda car

அட்மின் மீடியா
0

பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா நிறுவனம் ஓர் காம்பேக்ட் எஸ்யூவி ரக காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது இந்நிலையில்  தான் அறிமுகம் செய்ய இருக்கும் காரின் பெயரை அறிவிக்காமல் அந்த காருக்கான பெயரைக் கண்டுபிடிக்குமாறு நேம் யுவர் ஸ்கோடா என்ற பெயரில் ஓர் போட்டியை அறிவித்தது மேலும் காரின் பெயர் 'K' வில் தொடங்கி 'Q' வில் முடியும் எனவும் காரின் பெயரை சரியாகக் கண்டுபிடிப்பவர்களுக்கு அந்த புத்தம் புதிய கார் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

 


நாடு முழுவதும் பலரும் இந்த போட்டியில் பங்கேற்று காரின் பெயர்களை அனுப்பி வைத்தனர் . இந்நிலையில் கேரளா காசர்கோட் பகுதியை சேர்ந்த மதரசா குரான் படிப்பு சொல்லிகொடுக்கும் ஆசிரியர் சரியான பெயரை கூறி அந்த போட்டியில் வென்றிருக்கின்றார். 

அவர் கைலாக் (Kylaq) என்கிற பெயரை ஸ்கோடா நிறுவத்தினருக்கு அனுப்பி வைத்திருந்தார் . மேலும் கார் நிறுவனமும் புதிய காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு தாங்கல் தேர்வு செய்து வைத்திருந்த பெயரை சரியாக கண்டுபிடித்த காசர்கோட்-இல் உள்ள நஜாத் குர்ஆன் அகாடமியின் ஆசிரியராக பணியாற்றி வரும் ஹாஃபில் முஹம்மது ஜியாத் மர்ஜானி அல் யமானி என்பவர் வெற்றி பெற்றவராக அறிவித்துள்ளது கார் நிறுவனம்

கார் தயாரிப்பாளரான ஸ்கோடாவின் கூற்றுப்படி, கைலாக் என்பது கிரிஸ்டல் என்ற வார்த்தைக்கான சமஸ்கிருத வார்த்தையாகும், அதாவது படிகம். குயிக், காஸ்மிக், க்ளிக் மற்றும் கயாக் ஆகியவற்றை மாற்றி புதிய மாடலுக்கு கைலாக் என்று பெயரிடப்பட்டுள்ளது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback