Breaking News

இந்தியாவின் முதல் ரீயூசபிள் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது வீடியோ இதோ RHUMI-1

அட்மின் மீடியா
0

இந்தியா தனது முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட், RHUMI 1 ஐ விண்ணில் ஏவப்பட்டது.நாட்டின் முதல் மறுபயன்பாட்டு ஹைப்ரிட் ராக்கெட்டான RHUMI-1ஐ விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது

 


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ராக்கெட் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டாகும் RHUMI 1, மூன்று சோதனை செயற்கைக்கோள்களுடன் இன்று காலை 7 மணியளவில் மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில் இருந்து வானில் ஏவப்பட்டது.

விண்ணின் ஏவப்பட்ட இந்த RHUMI-1 என்ற செயற்கைக்கோள், புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஆராய்ச்சி தகவல்களை சேகரிக்கும். ராக்கெட்டில் ஜெனரிக்-எரிபொருள் அடிப்படையிலான கலப்பின மோட்டார் மற்றும் மின்சாரத்தால் உருவாக்கப்பட்ட பாராசூட் டிப்ளோயர் உள்ளது. 

மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட்டால், ஒரே ராக்கெட்டை பயன்படுத்தி பல முறை செயற்கைக்கோளை ஏவலாம் என கூறப்படுகிறது. இதனால் செலவு மிச்சப்படுத்தலாம் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ISRO செயற்கைக்கோள் மையத்தின் (ISAC) முன்னாள் இயக்குனர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையின் வழிகாட்டுதலின் கீழ், RHUMI பணி உருவாக்கப்பட்டது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1827236260425117748

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback