Breaking News

பொத்தேரி தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த ரவுடி கைது நடந்தது என்ன முழுவிவரம் Rowdy arrested for selling ganja near Potheri Private College

அட்மின் மீடியா
0

பொத்தேரி தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்த ரவுடி கைது நடந்தது என்ன முழுவிவரம்

கல்வி நிறுவனங்களை குறிவைத்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்த நிலையில்

சென்னை பொத்தேரியை அடுத்த காட்டாங்கொளத்தூரில் பிரபல பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் விடுதி மற்றும் கல்லூரியை சுற்றியுள்ள விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து 500 -க்கும் மேற்பட்ட போலீஸார் அதிகாலை 3 மணிக்கே அங்கு குவிந்தனர்.

குறிப்பாக அந்த கல்லூரிக்குச் சொந்தமான ஆண்கள், பெண்கள் விடுதி, சுற்றியுள்ள மாணவர்கள் தங்கும் விடுதிகளில் போலீஸார் சோதனை நடத்தினர். மேலும் விடுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கல்லூரி வளாகம், விடுதிகள் என போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போலீசார் , கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள், தனியாக தங்கள் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையை ஈடுபட்ட நிலையில் சோதனையின்போது போதைப்பொருட்கள் பயன்படுத்தி வந்த 20 மாணவர்கள் பிடிபட்டனர்.

மேலும் மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி (29) மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. 

இதனையடுத்து, ஏ ப்ளஸ் ரவுடியாக வலம் வந்த செல்வமணியை கைது செய்த போலீசார். செல்வமணியிடம் இரண்டு கால் கிலோ கஞ்சா மற்றும் 5 கத்திகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து, நடைபெறும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

A series of allegations have been made that educational institutions are being targeted for the sale of narcotics including ganjaThere is a famous engineering college in Kattangolathur next to Chennai Potheri. More than 500 policemen gathered there at 3 in the morning after receiving information about the circulation of ganja in the hostel of this college and hostels around the college. 

In particular, police raided the men's and women's hostels belonging to the college and the surrounding student hostels. They also brought the hostels under their control. 

There has been a commotion there as the police have been concentrated in the college campus and hostels.The police raided the hostels of the college students and their own homes, and 20 students were caught using drugs during the raid.

Further, during the investigation conducted with the students, it was revealed that a famous rowdy Selvamani (29) from Kuduvancheri Nandivaram area of ​​Chengalpattu district was selling drugs to the students. Following this, the police arrested Selvamani, who was crawling around as an A Plus rowdy. Two quarter kilos of ganja and 5 kg were seized from Selvamani.

It is expected that some more people will be arrested in this connection. According to the police, such investigations will continue.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback