Breaking News

சிக்கிமில் ஏற்பட்ட அதி பயங்கர நிலச்சரிவு - வைரல் வீடியோ Sikkim Landslide

அட்மின் மீடியா
0

சிக்கிமில் ஏற்பட்ட அதி பயங்கர நிலச்சரிவு - வைரல் வீடியோ

சிக்கிம் மாநிலத்தில் உள்ள தேசிய நீர்மின் கழகத்தின் டீஸ்டா ஸ்டேஜ் 5 அணையின் நீர் மின் நிலையம் பயங்கர நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தது. 510 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்த நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதியில் அடிக்கடி சிறு சிறு நிலச்சரிவு ஏற்பட்டு வந்தது.

நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.சிக்கிம் மாநிலத்தின் சிங்டாம் அருகே திப்பு தாரா பகுதியில் இன்று மிகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவினால், தீஸ்தா ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த ஹைட்ரோஎலக்ட்ரிக் மின் நிலையம் சேதமடைந்துள்ளது.கனமழை காரணமாக, கடந்த ஒரு வாரமாகவே, இந்த மின் நிலையப் பகுதியில் அவ்வப்போது நிலச்சரிவுகள் நேரிட்டு, அபாயத்தை ஏற்படுத்தி வந்தன.

அதனால் நீர்மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் இந்த பயங்கர நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை அப்பகுதியில் உள்ள மக்கள் வீடியோ எடுத்துள்ளனர்

அதேபோல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் இந்த டீஸ்டா அணையின் சிலபகுதிகள் அடித்து செல்லப்பட்டதால், அணை செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1825843044719145314

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback