Breaking News

🚀 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட்! வீடியோ இதோ

அட்மின் மீடியா
0
🚀 விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட்! வீடியோ இதோ 

புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் உதவக்கூடிய EOS-08 என்ற செயற்கைக்கோள் SSLV-D3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது!



ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. - டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. காலை 9.17 மணியளவில் விண்ணில் பாய்ந்தது இந்த எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட்

புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயன்பாடுகளுக்காக EOS-08 என்ற செயற்கைக்கோள் SSLV-D3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது

பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்றுப்பாதையில் இந்த செயற்கைகோள் 13 நிமிடத்தில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

3 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்ததாகும். இதனை ராக்கெட்டில் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. இந்த ராக்கெட்டில் 175 கிலோ எடை கொண்ட 3 ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவிகளும் ஒவ்வொரு பயன்பாடுகளுக்காக செயல்பட இருக்கிறது.

#SSLVD3 #ISRO #India


உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback