Breaking News

பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தமிழக அரசு அறிவிப்பு TATA ELECTRONICS JOB FAIR

அட்மின் மீடியா
0

மகளிர்க்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் டாட்டா எலேக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை டாட்டா எலேக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தவுள்ள மகளிர்க்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது

 


வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிர் திட்டம் மற்றும் டாட்டா எலேக்ட்ரோனிக்ஸ் நிறுவனம் (TATA ELECTRONICS) இணைந்து மகளிர்க்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் பின்வரும் மாவட்டங்களில் நடத்த உள்ளது. 

முகாம் நடைபெற உள்ள தேதிகள், இடம் மற்றும் தேவையான தகுதிகள் விவரம் கீழே அளிக்கப்பட்டுள்ளது: 

பணியின் தன்மை: தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டம்(NAPS): 

கல்வி தகுதி :- +2 தேர்ச்சி/ITI பயின்ற பெண்கள் (புதியவர்கள்) 

வயது வரம்பு:- 18-21 வரை உள்ள பெண்கள். 

தேவைப்படும் எண்ணிக்கை :- 1500 நபர்கள் 

பயிற்சிக்காலம்:- 12 மாதங்கள் 

உதவித்தொகை Rs.12,000/-  

இதர சலுகைகள்:- உணவு, போக்குவரத்து மற்றும் தங்கும் வசதி.

 முகாம் நடைபெற உள்ள மாவட்டங்கள்:-

தஞ்சாவூர்

திருச்சிராப்பள்ளி 

புதுக்கோட்டை

திருவாரூர் 

மயிலாடுதுறை 

நாகப்பட்டினம் 

முகாம் நடைபெற உள்ள நாள்:-

 29.08.24, 

30.08.24 (வியாழன், மற்றும் வெள்ளி) 

முகாம் நடைபெற உள்ள இடம்:-

 அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி இச்சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், பங்கேற்று பயன்பெறுமாறு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள மாணவியர்கள் / பெண்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் ஆணையர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback