Breaking News

வெளியானது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி tvk flag

அட்மின் மீடியா
0

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூர் அலுவலகத்தில் கொடியேற்றி ஒத்திகை செய்த வீடியோ வெளியாகியுள்ளது மஞ்சள் நிறத்தில் விஜய் முகத்துடன் கட்சி கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

பிப்ரவரி மாதத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புது அரசியல் கட்சியை தொடங்கினார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை இலக்காக வைத்து தனது கட்சி செயல்படும் என அறிவித்த நிலையில் தற்போது வெளியாக உள்ள The GOAT மற்றும் அதனை தொடர்ந்து அடுத்த படத்தோடு தான் நடிக்கப்போவதில்லை எனவும் அதனை தொடர்ந்து தீவிர அரசியலில் இயங்க அவர் திட்டமிட்டுள்ளார்.

 


பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில்  வரும் ஆக. 22ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றி, கட்சி கொடியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கொடி அறிமுக விழா வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தவெக கொடி ஒத்திகை நிகழ்வு இன்று நடந்து உள்ளது. இதில் நடிகர் விஜயின் உருவம் பொறித்த மஞ்சள் நிறக் கொடி ஏற்றப்பட்டு உள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் விஜய் முகத்துடன் கட்சி கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback