Breaking News

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நாளை அறிமுகம் செய்யப்படும் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! TVK FLAG

அட்மின் மீடியா
0

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நாளை அறிமுகம் செய்யப்படும் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நாளை அறிமுகம் செய்யவுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 

இது குறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.

சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி. கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம். என தெரிவித்துள்ளார்

தேதி- 22.08.2024 வியாழக்கிழமை நேரம் காலை 9.15 மணி முதல் இடம்: தலைமை நிலையச் செயலகம், பனையூர், சென்னை-600119

 உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback