தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய் கட்சி கொடி இதோ TVK Flag
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்தார் விஜய் கட்சி கொடி இதோ TVK Flag
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்யவுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ அறிவித்திருந்தார் இது குறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே.
சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள்.
தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி. கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு. கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம். என தெரிவித்துள்ளார்
அதேபோல் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தியுள்ளார் தமிழக வெற்றிக்கழக்கத்தின் கட்சி கொடியில் சிவப்பு மஞ்சள் நிறத்தில் மத்தியில் வாகை பூ படத்துடன் 2 போர் யானைகள் இருக்கும் வகையில் தவெக கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்