Breaking News

மத்திய அரசின் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் முழு விவரம் Unified Pension Scheme

அட்மின் மீடியா
0
அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதன் மூலம் ஜனவரி 1, 2004க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஓய்வூதியமாக 50% சம்பளத்தைப் பெறலாம்.

நாட்டின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைக்கும் அனைத்து ஊழியர்களையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் இந்த ஊழியர்களின் கண்ணியத்தையும் பொருளாதார பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப் போகிறது. இந்த நடவடிக்கை, அவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் மீது அரசின் உறுதிப்பாட்டை காட்டுகிறது” என பிரதம்ர் மோடி  தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்க்கு மத்திய அமைச்சரவை ஆகஸ்ட் 24, அன்று (UPS) ஒப்புதல் அளித்தது.  ஏப்ரல் 1, 2025 முதல் யுபிஎஸ் நடைமுறைப்படுத்தப்படும். 

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன?

இது அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம். 

உறுதிசெய்யப்பட்ட ஓய்வூதியம்: 25 ஆண்டுகள் குறைந்தபட்ச பணிக்கால தகுதியாக, ஓய்வுபெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி 

அடிப்படை ஊதியத்தின் 50%, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரையிலான சேவைக் காலத்திற்கும் வழங்கப்படும் 

உறுதிசெய்யப்பட்ட குடும்ப ஓய்வூதியம்: பணியாளரின் ஓய்வூதியத்தில் 60% குடும்பத்தினருக்கு பணியாளரின் மரணத்திற்கு பின் வழங்கப்படும் 

3 உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச ஓய்வூதியம்: குறைந்தபட்சம் 10 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும்போது மாதத்திற்கு ரூ.10000/- ஓய்வூதியம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) தொடர அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (யுபிஎஸ்) சேர முடிவெடுக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு உரிமை உண்டு

ஏற்கனவே 2004 முதல் NPS-ன் கீழ் ஓய்வு பெற்ற அனைவருக்கும் பொருந்தும். புதிய திட்டம் ஏப்ரல் 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்தாலும், NPS-ன் தொடக்கத்தில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மார்ச் 31, 2025 வரை ஓய்வு பெற்றவர்கள் உட்பட அனைவரும் UPS-ன் இந்த ஐந்து நன்மைகளுக்கும் தகுதி பெறுவார்கள். 

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு

Give Us Your Feedback