Breaking News

வாட்ஸ் ஆப்பில் இனி மொபைல் நம்பர் வேண்டாம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டெலகிராம் போல் Username வசதி அறிமுகம்

அட்மின் மீடியா
0

 ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டெலகிராம் போல் வாட்ஸ்அப் செயலியில் Username வசதி அறிமுகம்



உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளவாட்ஸ் ஆப் பல்வேறு அப்டேட்களை வாரி வழங்கி வருகின்றன.

வாட்ஸ்அப் செயலியில் Username அம்சம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.  சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய குறுந்தகவல்களை எடிட் செய்யும் வசதி மற்றும் சாட் லாக் போன்ற அம்சங்களை வாட்ஸ்அப் வழங்கி இருந்தது.

இந்நிலையில் புதிய வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.11.15 வெர்ஷனில் உள்ள புதிய அம்சம் கொண்டு பயனர்கள் தங்களது அக்கவுண்ட்களில் யூசர்நேம் வைத்துக் கொள்ள செய்கிறது. 


 

வழக்கமாக பயன்படுத்தப்படும் மொபைல் எண்ணை பயன்படுத்தாமல் இனி இந்த யூசர்-நேமை (Username) பயன்படுத்தலாம். இனி எதிர்காலத்தில் வாட்ஸ் அப் பயனர்கள் அவர்கள் விரும்பும் தனி பயனர் பெயர்களை கொண்டு தங்களை தனித்து அடையாளம் காண்பித்துக் கொள்ளலாம்.இதேபோன்ற அம்சத்தை அடிப்படையாக கொண்டு டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை வாட்ஸ்அப் செட்டிங்ஸ் ப்ரோஃபைல் ஆப்ஷன்சென்று மார்றி கொள்ளலாம் WABetaInfo ஆல் பகிரப்பட்ட ஸ்கிரீன்ஷாட், யூசர்நேம் அம்சத்தை பயன்பாட்டின் அமைப்புகள் மெனு மூலம் அணுக முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது. 

வாட்ஸ் அப் யூசர்-நேம் கொண்டு ஒரு தனிநபர் வாட்ஸ் அப் கணக்கை அடையாளம் காணலாம். தற்போதுள்ள நடைமுறைப்படி மொபைல் எண் மூலமே அறியப்படுகிறோம். இனி யூசர் நேம் மூலம் எதிர்காலத்தில் வாட்ஸ் அப் பயனர்கள் தங்களின் பெயர்களை அடையாளப்படுத்திக் கொள்ளலாம். இந்த புதிய அம்சத்தை நிறுவனம் மிக விரைவில் மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. 

யூசர்நேம்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், பயனர்கள் தங்கள் தனித்துவத்தையும், பயனரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பையும் மேம்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி பயனர்கள் அவர்களுடைய மொபைல் எண்களை வெளிப்படுத்தாமல் மெசேஜ் (WhatsApp Message) செய்துகொள்ளலாம்.

 

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback