Breaking News

பாரம்பரிய முறையில் மயில் குழம்பு வைப்பது எப்படி?' என யூடியூபில் வீடியோ பதிவிட்ட நபர் கைது YouTuber traditional peacock curry recipe

அட்மின் மீடியா
0
A YouTuber from Telanagana's Rajanna Siricilla district has been detained after a video featuring a "traditional peacock curry recipe" went viral on social media, drawing criticism from viewers.
பாரம்பரிய முறையில் மயில் குழம்பு வைப்பது எப்படி?' என யூடியூபில் வீடியோ பதிவிட்ட நபர் கைது YouTuber traditional peacock curry recipe

பாரம்பரிய மயில் குழம்பு வைப்பது எப்படி?' என யூடியூபில் வீடியோ பதிவிட்ட சிர்சிலா பகுதியை சேர்ந்த யூடியூபர் கொடாம் ப்ரனாய் குமார் என்பவர் கைது!

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த வனத்துறை அதிகாரிகள் அவரின் ரத்தம் மற்றும் உணவு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.




மயில் கறி சமைப்பது எப்படி' - யூடியூபர் மீது வழக்குப்பதிவு தெலங்கானாவில் 'மயில் கறி சமைப்பது எப்படி' என யூடியூப் சேனலில் வீடியோ பதிவிட்ட யூடியூபர் மீது வழக்குப்பதிவு

பிரணாய் குமார் என்பவர் தன்னுடைய யூடியூப் சேனலில் பாரம்பரிய உணவுகளை எப்படிச் சமைத்துச் சாப்பிடுவது குறித்து வீடியோக்களை பதிவேற்றி வரும் நிலையில், சமீபத்தில் 'மயில் கறி சமைப்பது எப்படி' என வீடியோ தயாரித்து வெளியிட்டுள்ளார். பரிசோதனையில் மயில் இறைச்சி இருப்பது உறுதியானால், பிரணாய் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தகவல்

தெலுங்கானா மாநிலம், சிரிசில்லா பகுதியை சேர்ந்தவர் கோடம் பிரனய் குமார். இவர் தனது யூடியூப் சேனலில் சமையல் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் பாரம்பரிய முறையில் மயில் குழம்பு செய்வது எப்படி..? என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை யூடியூபில் வெளியிட்டார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பிரனய் குமாரின் வீட்டை சோதனையிட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் அவரை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பிரனய் குமார் சமையலுக்கு பயன்படுத்திய இடத்தை ஆய்வு மேற்கொண்ட போலீசார், அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்

பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ள தேசிய பறவையான மயிலை சாப்பிட்டது உறுதி செய்யப்பட்டால், வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை பெற வாய்ப்புள்ளது. 

மேலும், பிரனய் குமாரின் யூடியூப் தளத்தில் இருந்து மயில் குழம்பு தொடர்பான காணொலியையும் போலீசார் நீக்கியுள்ளனர்.இதற்கு முன்னதாக காட்டுப் பன்றிக் கறி சமையல் வீடியோவையும் பிரனய் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை தினந்தோறும் நடக்கும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள நமது அட்மின் மீடியா சமூக வலைதளங்களை Follow செய்யுங்கள்

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback