தூத்துக்குடி புகைப்பட கண்காட்சி போட்டி முதல் பரிசு 1 லட்சம் முழு விவரம் இதோ Thoothukudi Photo Exhibition Competition First Prize 1 Lakh
தூத்துக்குடி புகைப்பட கண்காட்சி போட்டி முதல் பரிசு 1 லட்சம் முழு விவரம் இதோ Thoothukudi Photo Exhibition Competition First Prize 1 Lakh
Thoothukudi Photo Exhibition Competition First Prize 1 Lakh |
தூத்துக்குடி புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இப்புகைப்படப் போட்டிக்காக தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கை காட்சிகள் (கடற் பரப்புக்கள் நதிக் காட்சிகள், ஈர நிலங்கள், நகர்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள் (தொழில்துறை, மீன்பிடித்தல்), விளையாட்டு என அனைத்து வகையான புகைப்படங்களையும் போட்டிக்கு அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இப்போட்டியில் வெற்றி பெரும் நபருக்கு முதல் பரிசாக ரூ.1லட்சம் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது
போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://thoothukudicorporation.com/pc என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து வெளியான அறிவிப்பில்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 5ஆவது புத்தகத் திருவிழா மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மிகவும் சிறப்பாக நடத்தப்படவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் தலைச்சிறந்த எழுத்தாளர்கள் இ சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் மிகச்சிறந்த சமூக சிந்தனைப் பேச்சாளர்கள்இ அரசியல் ஆளுமைகள் நட்சத்திரப் பேச்சாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கவிஞர்கள் கலந்துகொண்டு வெவ்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றவுள்ளார்கள். இப்புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு, தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இப்புகைப்படப் போட்டிக்காக தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள். மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கை காட்சிகள் (கடற் பரப்புக்கள் நதிக் காட்சிகள், ஈர நிலங்கள், நகர்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள் (தொழில்துறை, மீன்பிடித்தல்). விளையாட்டு போன்ற தலைப்புகளில் இருத்தல் வேண்டும்.
Thoothukudi Photo Contest |
விதிகள்
1. புகைப்படங்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த படங்களாக மட்டுமே இருக்க வேண்டும்
2. இந்தியாவிலிருந்து எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம்.
3. விண்ணப்பதாரர் அதிகபட்சம் ஐந்து படங்களை சமர்ப்பிக்கலாம்.
4. விண்ணப்பதாரர் தனது சொந்த படங்களை மட்டுமே அனுப்ப வேண்டும்
5. கிராபிக்ஸ் மற்றும் AI உருவாக்கிய படங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
புகைப்படங்கள் சமர்ப்பிக்கும் அளவுகோள்கள்
1. படங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
2. படங்கள் 100 dpi இல் நீண்ட பக்கத்தில் 3000 பிக்சல்கள் கொண்ட RGB கோப்புகள் பரிந்துரைக்கப்படுகிறது
3. கருப்பு வெள்ளை புகைப்படங்கள் அனுப்பலாம்
4. ஒவ்வொரு புகைப்படமும் புகைப்படத்திற்கான தலைப்புடன் இருக்க வேண்டும்
5. ஒவ்வொரு புகைப்படமும் குறைந்தபட்சம் 5MB க்கு குறைவாக இருத்தல் வேண்டும்.
கோப்பு விபரக்குறிப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டிய புகைப்படங்கள் பின்வரும் விவரக் குறிப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்:
1. வெற்றி பெற்ற போட்டியாளர்கள் முழு தெளிவுத்திறன் கொண்ட RAW/TIFF அச்சிடுவதற்கும் / உண்மை தன்மையினை அறிவதற்கும் சமர்ப்பிக்கும்படி கேட்கபடுவார்கள்
2. படங்களில் பார்டர்கள் / வாட்டர் மார்க்க்ஸ் அல்லது எந்தவித அடையாளமும் இருத்தல் கூடாது பயன்பாடு 1. பட்டியலிடப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் கண்காட்சி, சமூக ஊடகங்கள், ஆன்லைன் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவர பயன்படுத்தப்படும் 2. நடுவர்களின் முடிவே இறுதியானது
3. விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நிர்வாகம் எடுக்கும் அனைத்து வகையான முடிவுக்கும் கட்டுப்பட்டவர்கள் ஆவார்கள். இப்புகைப்படப் போட்டியானது இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும்.இப்புகைப்படப் போட்டியில் கலந்துகொள்ள 18 வயது வரையிலான நபர்கள் ஒரு பிரிவாகவும்,18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு பிரிவாகவும் என இரண்டு பிரிவுகளின் கீழ் போட்டியில் கலந்துகொள்ளலாம்.
மேலும், புகைப்படப் போட்டிக்காக அனுப்பப்படும் புகைப்படங்கள் அனைத்தும் தகுதிவாய்ந்த தேர்வு குழுவினரால் கூராய்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம் மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்படும் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும், ஒவ்வொரு பிரிவிலும் மிகச்சிறந்ததாக தெரிவு செய்யப்படும் புகைப்படம் புத்தகக் கண்காட்சி நடைபெறும் அனைத்து நாட்களிலும், பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படும். ஒரு நபர் அதிகபட்சமாக 5 புகைப்படக்களைத் தேர்வுக்காக அனுப்பலாம்.
எனவே, புகைப்படக் கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தங்களது படைப்புகளை செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். புகைப்படப் போட்டிக்காக அனுப்பப்படும்
புகைப்படங்களை மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான https://thoothukudi.nic.in/ இல் வெளியிடப்படும் இணைப்பில் (LINK) பதிவேற்றம் செய்யலாம்.
https://thoothukudicorporation.com/pc/index.php
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி