Breaking News

கேரளா மலப்புரத்தில் பரவும் நிபா வைரஸ் - கட்டுப்பாடுகள் அமல்- காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி

அட்மின் மீடியா
0

கேரளா மலப்புரத்தில் பரவும் நிபா வைரஸ் - கட்டுப்பாடுகள் அமல்..! காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் படித்து வந்தவர் கடந்த வாரம் சொந்த ஊருக்குத் திரும்பிய  சில நாட்களில் தொடர்ந்து காய்ச்சல் இருக்கவே உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் இளைஞர் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். அவரின் ரத்த மாதிரிகளைச் சோதனை செய்தபோது நிபா வைரசால் பலியானது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா வைரஸ் பரவலை தடுக்க களம் இறங்கும்படி சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதித்த இரண்டாம் நபர் பலியான நிலையில், நிபா வைரஸ் பாதித்த திருவல்லி கிராம பஞ்சாயத்து மற்றும் மம்பத் கிராம பஞ்சாயத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள்:-

பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

அத்தியாவசியமாக இருந்தால், குறைந்த எண்ணிக்கையில் கூடுவதற்கும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் உத்தர்விடப்பட்டுள்ளது.

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் சுயமாக மருத்துவம் செய்துகொள்ளாமல், உடனடியாக மருத்துவமனையை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும்.மருந்தகங்களுக்கு மட்டும் இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்போது கவலைப்பட ஒன்றுமில்லை. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback