அமெரிக்காவில் அடர்ந்த காட்டில் காணாமல் போன 10 வயது சிறுமி தெர்மல் ட்ரோன் கேமரா உதவியுடன் மீட்பு வீடியோ Drones find missing 10-year old girl in forest
அமெரிக்காவில் உள்ள லூசியானா அடர்ந்த காட்டில் காணாமல் போன 10 வயது சிறுமி தெர்மல் ட்ரோன் கேமரா உதவியுடன் மீட்க்கப்பட்டாள் Missing 10-Year-Old Girl Found Safe in After Sleepwalking Into the Woods
லூசியானாவின் டப்பர்லியைச் சேர்ந்த 10 வயதான Peyton Saintignan என்ற சிறுமி கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி ஷ்ரெவ்போர்ட் அருகே உள்ள தனது வீட்டில் இருந்தவர் காணாமல் போனார்
மறுநாள் காலை பெய்டன் செயின்ட்னன் காணாமல் போனது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்த போது அருகில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள் சிறுமி சுற்றித் திரிந்தது கேமராவில்
பதிவாகி இருந்தது கண்டிபிடிக்கப்பட்டது
உடனடியாக ஷெரிப், லூசியானா மாநில காவல்துறை மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் காடுகளில் சிறுமியை தேடினார்கள்
நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் பல ஏஜென்சிகள் தீவிர தேடலைத் தொடங்கினர் தெர்மல் இமேஜிங் பொருத்தப்பட்ட ட்ரோன்களும் களத்தில் இறங்கியது
விடாமுயற்ச்சியில் இரவு 11 மணியளவில்வீட்டிலிருந்து 1.5 மைல் தொலைவில் காட்டில் தரையில் சுருண்டு படுத்து கிடந்த பெய்டனைக் கண்டார்கள் உடனடியாக மீட்பு குழுவினர் அங்கு சென்று அவளை மீட்டனர்
அடர்ந்த காட்டில் காணாமல் போன 10 வயது சிறுமியை ட்ரோன் கேமரா உதவியுடன் மீட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1838592638997409828
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
follow us on twitter :- CLICK HERE
Follow us on Facebook :- CLICK HERE
Follow us on telegram :- CLICK HERE
Follow us on whatsapp channel :- CLICK HERE
Follow as on Instagram :- CLICK HERE
download our app play store :- CLICK HERE
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ