Breaking News

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் தமிழக ஊர்காவல் படையில் பணி விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் orr kaval padai application 2024

அட்மின் மீடியா
0

கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆண்கள், பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. TN Home Guard Recruitment 2024 - 2025


சேலம் மாவட்ட காவல் துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் 

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. உயரம் ஆண்கள் 167 சென்டிமீட்டர். பெண்கள் 157 சென்டிமீட்டர். எந்தவித குற்ற வழக்கிலும் ஈடுபடாமலும் சாதி மத அரசியல் மற்றும் எந்தவித சங்கத்திலும் உறுப்பினராக இருக்கக் கூடாது. விண்ணப்பங்களை கடலூர் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் 17.09.2024 அன்று காலை 10.00 மணி முதல் 23.09.2024 மாலை 5 மணிக்குள் பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்களை தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு. பணி அமர்த்தப்படுவார்கள். 

கல்விதகுதி:-

10ஆம் வகுப்பு, 

வயது வரம்பு:-

20 வயது முதல் 45 வயதிற்குள், 

உடல் தகுதி:-

உயரம் ஆண்கள் 167 செ.மீ, 

பெண்கள் 157 செ.மீ 

மற்றும் நல்ல உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். 

கூடுதல் விவரம்:-

விண்ணப்பதாரர்கள் எவ்வித குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருக்கக்கூடாது.

தேர்விற்கு ஆஜராகும்போது விண்ணப்பதாரர்கள் 

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ - 2, 

கல்வி தகுதி சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு (அசல் மற்றும் நகல்கள்) கொண்டு வர வேண்டும். 

ஊர்க்காவல் படை பிரிவானது தன்னார்வ தொண்டு ஆகும். எனவே தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதத்திற்கு 5 நாட்கள் மட்டும் பணிபுரிய அழைக்கப்படுவர். 

பணிபுரியும் நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் மாதம் ரூ.2,800 வழங்கப்படும். 

ஊர்க்காவல்படை பணிக்கு உண்டான தகுதிகள் அரசு ஊழியராக இருப்பின் அவர் தம் துறை அதிகாரியிடம் தடையில்லா சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback