Breaking News

இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் இடத்தில் இறக்கி விடவேண்டும் திண்டுக்கல் போக்குவரத்து மண்டலம் சுற்றறிக்கை

அட்மின் மீடியா
0

இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் இடத்தில் இறக்கி விட வேண்டும் திண்டுக்கல் போக்குவரத்து மண்டலம் சுற்றறிக்கை

திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் அனைத்து தொலைதூர புறநகர் பேருந்துகளை ஓட்டும் ஓட்டுநர்கள், இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் இடத்தில் , அவர்களை இறக்கி விட வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியாகி உள்ளது

இது சம்பந்தமாகக் கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி தமிழக அரசுப் போக்குவரத்து கழகம் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது

திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் நகரப் பேருந்து வசதி இல்லாத நேரமான இரவு நேரங்களில், பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கோரும்பட்சத்தில் இறக்க வேண்டிய நிறுத்தத்தின் பாதுகாப்பினை அறிந்து. அதற்கேற்ப அவர்களை இறக்கிவிட்டுச் செல்லுமாறு, இதுபோன்ற புகார்கள் எழாவண்ணம் பணிபுரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எனவே, திண்டுக்கல் மண்டலம் மூலம் இயக்கப்படும் அனைத்து தொலைதூர புறநகர் பேருந்துகளும் இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் கேட்கும் நிறுத்தத்தில் நிறுத்திச் செல்ல தடத்தில் பணிபுரியும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் புகார் வராவண்ணம் பணிபுரிய இதில் கிளை மேலாளர்கள் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் பயணிகளிடமிருந்து புகார் பெறப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது துறைசார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சுற்றறிக்கையை அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களும் தெரிந்து கொள்ளும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டியும், தகவல் நோட்டில் கையொப்பம் பெறவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback