வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என பரவும் வதந்தி யாரும் நம்பவேண்டாம் 100 units of free electricity will be cancelled is rumor
வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என பரவும் வதந்தி யாரும் நம்பவேண்டாம் There is a rumor that the 100 units of free electricity provided to households will be cancelled
பரவும் செய்தி::-
வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து? வீடுகளுக்கான 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2 மாதத்திற்கு ஒருமுறை வீடுகளில் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அப்போது 100 யூனிட் மின்சாரம் இலவசமாக அளிக்கப்படுகிறது. எஞ்சிய பயன்பாட்டுக்கே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிலர் முறைகேடு செய்வதால் இழப்பு ஏற்படுவதாகவும், இதனால் 100 யூனிட் இலவசத்தை ரத்து செய்ய மின்வாரியம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
உண்மை என்ன:-
வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற செய்தி உண்மையில்லை. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் உண்மைக்கு மாறான செய்தியை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது
இது குறித்த அறிவிப்பில்:-
வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் இந்த உண்மைக்கு மாறான செய்திகளை நம்ப வேண்டாம்! எங்களின் அதிகாரப்பூர்வத் தளங்களை பார்க்கவும்.!
The information circulating on social media is incorrect. For accurate updates, please visit our official website.
மின் வாரிய அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/TANGEDCO_Offcl/status/1839316915325706312
Tags: FACT CHECK தமிழக செய்திகள் மறுப்பு செய்தி