Breaking News

இஸ்ரேல் தாக்குதலால் பற்றி எரியும் லெபனான் தலைநகர் பெய்ரூட் பலி எண்ணிக்கை 1000 த்தை தாண்டியது

அட்மின் மீடியா
0

காசாவுக்கு எதிரான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக களத்தில் இறங்கியது ஈரான் ஆதரவுடன் லெபனானிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு, வடக்கு இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது

இதனை அடுத்து லெபனான் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல் அதன் தொடர்ச்சியாக  ஹிஸ்புல்லா அமைப்பினரின் பேஜர், வாக்கி டாக்கி என சைபர் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் அதனை தொடர்ந்து போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றது



இதில் ஏற்கெனவே 600க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், நேற்று நடந்த தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டை குறிவைத்து இஸ்ரேல் நேற்று தீவிர தாக்குதலை நடத்தியது.கடந்த 10 மணி நேரமாக இந்த தாக்குதல் நீடித்திருக்கிறது. 

ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகனைகளை பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று கூறி, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன. இந்த கொடூர தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் பொதுச்செயலாளரான ஹசன் நஸ்ரல்லா குறிவைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் 300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் 200 பேர் காயமடைந்தனர். கடந்த செப்.23ம் தேதி முதல் தற்போது வரை லெபனானில் 1000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, 90 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் லெபனானில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று ஐநா கூட்டத்தில் லெபனான் மீதான் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய, இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு, போ் நிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback