Breaking News

11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை சென்னை வானிலை ஆய்வு மையம் Rain Update

அட்மின் மீடியா
0

11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை சென்னை வானிலை ஆய்வு மையம்

Rain Update
Rain Update

மத்திய வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில், மத்தியமேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். 

இதனால் 23.09.2024 மற்றும் 24.09.2024: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்

மேலும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback