Breaking News

காரில் பசுவைக் கடத்திச் செல்வதாக தவறாக நினைத்து 12ம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற பசு பாதுகாப்பு குண்டர்கள்! Haryana Class 12 student mistaken for a cow smuggler, chased and shot dead

அட்மின் மீடியா
0
காரில் பசுவைக் கடத்திச் செல்வதாக தவறாக நினைத்து 12ம் வகுப்பு மாணவனை சுட்டுக்கொன்ற பசு பாதுகாப்பு குண்டர்கள்! Haryana Class 12 student mistaken for a cow smuggler, chased and shot dead
 
Five people, identified as cow vigilantes, were arrested on charges of killing a Class 12 student after mistaking him for a cattle smuggler in Faridabad

A 19-year-old Class 12 student was shot and killed after he was mistaken for a cattle smuggler in Haryana's Faridabad. The accused chased the victim's car for 25 kilometres before killing him. Five people were arrested in connection with the incident

ஹரியானா மாநிலம், பரிதாபாதில் 12ம் வகுப்பு மாணவர் பசு கடத்தியதாக தவறுதலாக நினைத்து அவரை 30 கி.மீ., காரில் துரத்தி சென்று ஒரு கும்பல் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 


ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் உள்ள பசு பாதுகாவலர்கள் அணில் கவுசிக், வருண், கிருஷ்ணா உள்ளிட்ட சிலருக்கு  தங்கள் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் படேல் சவுக் அருகில் கண்காணிப்பில் இருந்துள்ளனர்.

அப்போது அவ்வழியே வந்த டஸ்டர் காரை ஆர்யனின் நண்பர் ஓட்டி வந்துள்ளார் அங்கு ஆயுதங்களுடன் சிலர் இருப்பதை பார்த்த அவர்கள்  காரை நிறுததாமல் வேகமாக இயக்கி உள்ளார்

அப்போது பசுகாவலர்கள் ஆர்யன் சென்ற காரில் தான் பசு கடத்தப்படுகிறது என தவறாக நினைத்து காரில் அவர்களை சுமார் 25 கி.மீ வரை துரத்திச் சென்றுள்ளனர். ஆர்யன் காரை கத்புரி அருகே வழிமறித்த கும்பல், துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளது. 

இதில் காரில் இருந்த ஆர்யன் கழுத்திலும் மார்பிலும் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் பசு இல்லாததால் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றார்கள்

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback