12-ஆம் வகுப்பு மாணவிக்கு அரசுப்பள்ளியில் வளைகாப்பு, ரீல்ஸ் வீடியோ எடுத்த மாணவியர் வெளியான வீடியோவால் வெடித்த சர்ச்சை.. நடந்தது என்ன?
12-ஆம் வகுப்பு மாணவிக்கு அரசுப்பள்ளியில் வளைகாப்பு ரீல்ஸ் வீடியோ எடுத்த மாணவியர் வெளியான வீடியோவால் வெடித்த சர்ச்சை..நடந்தது என்ன?
வேலூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு டிஜிட்டலில் பத்திரிக்கை அடித்து, பத்திரிக்கையை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூா் மாவட்டம், காட்பாடி பகுதியிலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு மாணவிகள் சிலா் சக மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போன்று விழா நடத்தி அதனை விடியோவாக பதிவு செய்து எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா்.அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேலுார் அருகே ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவியர், வளைகாப்பு வீடியோ எடுக்க திட்டமிட்ட அவர்கள் அதற்காக, மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்தப் போவதாக, டிஜிட்டல் அழைப்பிதழ் தயாரித்து, அதில் வளைகாப்பு தேதி, நேரம், இடம் ஆகியவற்றை பதிவு செய்து அனைவரும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
மாணவியின் பெயருடன் ஒரு ஆணின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியின் பெயரைக் குறிப்பிட்டு இங்கே நடக்கப் போகிறது என இடம், தேதியைக் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி இந்த ரீல்களை மாணவர்கள் வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது.
வீடியோவில், அனைத்து மாணவர்களும் பள்ளி சீருடையில் உள்ளனர். மாணவிக்கு மட்டும் புடவை அணிவது போல் துப்பட்டாவை சுற்றி, வயிற்றில் துணியை மறைத்து கர்ப்பமாக இருப்பது போல் நடிக்கின்றனர். மேலும் வளைகாப்புக்கு தேவையான சில பொருட்களையும் வாங்கி வரிசையாக வைத்துள்ளனர்.
கூடியிருந்த மாணவ மாணவிகள் அனைவரும் தாம்பூலத்தில் ஆரத்தி செய்து சந்தனம் பூசினர். இது குறித்து விசாரணை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவியர் தொடர்பான பிரச்னை என்பதால், தீர விசாரித்த பிறகே நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, அப்பள்ளி தலைமை ஆசிரியரை அழைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, பள்ளிக்கு மொபைல்போன் எடுத்து வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்