Breaking News

14 ம் தேதிக்குள் ஆதாரை அப்டேட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும் நீங்கள் தெளிவு பெற முழு விளக்கம் What will happen if Aadhaar is not updated by 14th

அட்மின் மீடியா
0

14 ம் தேதிக்குள் ஆதாரை அப்டேட் செய்யவில்லை என்றால் என்ன ஆகும் நீங்கள் தெளிவு பெற முழு விளக்கம் What will happen if Aadhaar is not updated by 14th full explanation for you to get clarity

ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க, ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்தது.இதன்படி ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள், ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.

அந்த அடிப்படையில், ஆதார் அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக்கொள்ள வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால்  ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், தற்போது, இந்த சேவையை 14.09.2024 வரை இலவசமாக மைஆதார் 'my Aadhaar' எனும் இணையத்தில் அப்டேட் செய்யலாம் என ஆதார் ஆணயம் அறிவித்துள்ளது

10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டியது ஏன் அவசியம் 

ஆதார் எடுத்த பலரும் தங்களது முகவரி மற்றும் செல்போன் எண்களை மாற்றி இருப்பார்கள். மேலும் அவர்களது முகங்கள் 10 வருடங்களில் மாறி இருக்கலாம், ஆதாரில் பழைய புகைப்படங்கள் இருக்கும். அதேபோல் கைரேகை மாறி இருக்கவும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாகவே 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. 

ஆதாரை புதுப்பிப்பது எப்படி:-

ஆதாரை புதுப்பிக்க நீங்கள் ஆன்லைனில் புதுப்பிக்கலாம் அல்லது அருகில் உள்ள இ சேவை மையங்களில் புதுப்பிக்கலாம்

https://myaadhaar.uidai.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் செல்லவும். 

அடுத்து அதில் லாகின் என்பதை கிளிக் செய்து உள் நுழையுங்கள்

அதன்பின்பு உங்கள் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபியை பதிவிடுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில் 'Document Update' என்பதை கிளிக் செய்யுங்கள்

அதில் உங்கள் ஆதார் விவரங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்

அடுத்து உங்கள் முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்து தங்கள் ஆதாரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

ஆதாரை புதுப்பிக்காமல் விட்டால் என்ன ஆகும்:-

அதாவது ஆதாரை புதுப்பிக்க வருகிற 14-ந் தேதி வரை கட்டணம் இல்லை. இலவசமாக பதிவு செய்யலாம். 

14-ந் தேதிக்கு பிறகு இதற்கு ரூபாய் 50 கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வளவு தான்

ஆதாரில் கைரேகையை புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்களா

இது முற்றிலும் பொய்யான தகவல்.  ரேஷன் கடைகளில் கைவிரல்ரேகை/கண்கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் (Authentication failure) குடும்ப அட்டைதாரர்களுக்கு தனியே பதிவேட்டில் கையொப்பம் பெற்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. 

கைவிரல் ரேகை சரிபார்க்காத காரணத்தினால் எந்த குடும்ப அட்டைதாரருக்கும் பொருட்கள் மறுக்கப்படுவதில்லை. 

ஆதார் அட்டை புதுப்பிக்கும் பொருட்டு கண்கருவிழி, கைரேகை மறுபதிவு செய்வதற்கும் நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவதற்கும் எவ்வித தொடர்புமில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை விளக்கமளித்துள்ளது. 

Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback