வேலூரில் பரபரப்பு 14,000 வாங்கிய கடனை திருப்பி தராததால் 2 சிறுவர்கள் கொலை - தந்தையின் நண்பர் கைது, நடந்தது என்ன முழு விவரம்
வேலூரில் பரபரப்பு ரூ 14,000 வாங்கிய கடனை திருப்பி தராததால் 2 சிறுவர்கள் கொலை - தந்தையின் நண்பர் கைது நடந்தது என்ன முழு விவரம்
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூரைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு தர்ஷன் (வயது 4) மற்றும் யோகித் (வயது 6) என 2 ஆண் குழந்தைகள் இருந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஏரிபட்டி பகுதியில் வசித்து வருபவர் வசந்த குமார். இருவரும் நண்பர்கள்
இந்நிலையில் வசந்த குமார் நேற்று இரவு தன்னுடைய நண்பன் யோகராஜ் வீட்டிற்கு சென்றவர் அவருடைய குழந்தைகள் 4 வயது தர்ஷன் , 5 வயது யோகித் இருவரையும் கடைக்கு செல்லலாம் என கூறி வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்றவர் இரவு வரை குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி வரவே இல்லை .
இதனையடுத்து பெற்றோர் வசந்தகுமாருக்கு தொடர்பு கொண்ட போது அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அச்சமடைந்த யுவராஜ், உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர் காணாமல் போன 2 குழந்தைகளும், வேலூர் மாவட்டம் சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயிலின் பின்புறம் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பின்னர், அங்கு சென்ற ஆம்பூர் போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார், இரண்டு குழந்தைகளின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் வசந்தகுமாரை கைது செய்த நிலையில் குழந்தைகளின் பெற்றோருக்கு 14,000 ரூபாய் கொடுத்ததாகவும் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காததால் கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதே சமயத்தில் கோவில் அருகே குழந்தைகள் கொல்லப்பட்டதால் நரபலியாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில்:-
யோகராஜ் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு திருப்பி தரவில்லை. இதனால் எனக்கும் எனது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரது 2 குழந்தைகளையும் கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர். இந்த கொலைக்கு பயன்படுத்திய வசந்தகுமாரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தகராறில் நண்பனின் குழந்தைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Tags: தமிழக செய்திகள்