Breaking News

15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் 4 ஆக அதிகரிப்பு தெற்கு ரயில்வே அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ரயில் பயணிகளின் வசதிக்காக 15 விரைவு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் 4 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம் -- மதுரை அமிர்தா விரைவு ரயிலில் (எண்: 16343) 2025 ஜன., 20 முதல் ஒரு 2ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி குறைக்கப்பட்டு கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டியுடன், நான்கு முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுடன் இயக்கப்படும்.

மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் (16344) ஜன., 21 முதல் இந்த வசதியுடன் இயக்கப்படும்.

திருநெல்வேலி -- மேற்குவங்கம் புரூலியா விரைவு ரயில் (22606/22605) இரு மார்க்கத்திலும் ஜனவரி இறுதி வாரம் முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்.  

சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்-ஹைதராபாத் விரைவு ரயில் (எண் 12603) ஜன.20-ஆம் தேதி முதல் 14 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்.

புதுச்சேரி-மங்களூா் விரைவு ரயில் (16855) ஜன.16-ஆம் தேதி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்

சென்னை சென்ட்ரல்-நாகா்கோவில் விரைவு ரயில் (எண் 12689) ஜன.17-ஆம் தேதி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி விரைவு ரயில் (16361) ஜன.18-ஆம் தேதி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் 

கொச்சுவேலி-நிலாம்பூா் ராஜ்ய ராணி விரைவு ரயில் ஜன.19-ஆம் தேதி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்

சென்னை சென்ட்ரல்-ஆலப்புழை விரைவு ரயில் (22639), ஜன.21-ஆம் தேதி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்

திருவனந்தபுரம்-மதுரை அமிா்தா விரைவு ரயில், ஜன.21-ஆம் தேதி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்

சென்னை சென்ட்ரல்-மைசூரு காவேரி விரைவு ரயில், ஜன.21-ஆம் தேதி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்

            

சென்னை சென்ட்ரல்-பாலக்காடு விரைவு ரயில் (22651) ஜன.21-ஆம் தேதி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்

ஜன.20-ஆம் தேதி முதல் 4 முன்பதிவில்லா பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்

விழுப்புரம்-காரக்பூா் விரைவு ரயில் (22604) ஜன.21-ஆம் தேதி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்

சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் விரைவு ரயில் (12695), திருநெல்வேலி-புருலியா விரைவு ரயில் ஜன.22 முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும்

புதுச்சேரி-கன்னியாகுமரி விரைவு ரயில் ஜன.26-ஆம் தேதி முதல் 4 முன்பதிவு இல்லா பெட்டிகளுடன் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

                 

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback