Breaking News

தொழில் தொடங்க தமிழக அரசு வழங்கும் ரூபாய் 15 லட்சம் கடன் உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் tabcedco loan details

அட்மின் மீடியா
0

தொழில் தொடங்க தமிழக அரசு வழங்கும் ரூபாய் 15 லட்சம் கடன் உதவித்தொகை! விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் tabcedco loan details



தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக லிமிடெட் (TABCEDCO) குழுக்கடன் திட்டம் 

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவியாக தொடங்கப்பட்ட கடன் திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலம், சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ஆடவர் மற்றும் மகளிர் குழுவாக இணைந்து சிறு தொழில் அல்லது வணிகம் துவங்குவதற்கு கடன் வழங்கப்படுகிறது. 

ஒரு குழுவில் 20 பேர் வரை சேர்ந்து, தங்களுக்கு தேவையான கடன் தொகையைப் பெறலாம். ஒவ்வொரு குழு உறுப்பினருக்கும் அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரை கடன் வழங்கப்படும், மற்றும் மொத்தக் குழு ரூ. 15 லட்சம் வரை கடனைப் பெற முடியும்.

வட்டி விகிதம்: ஆண்டு வட்டி 6% ஆக இருக்கும். 

கடன் திரும்ப செலுத்தும் காலம்: கடனை திரும்ப செலுத்த 2½ ஆண்டுகள் (30 மாதங்கள்) கால அளவு வழங்கப்படும். 

ஒரு குழுவில் 20 பேர் வரை மட்டுமே சேர்ந்து குழுவாக கடன் பெற முடியும். 

குழு துவங்கி குறைந்தது 6 மாதங்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

தகுதிகள்:

ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 60 வயது வரை 

ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

அனைத்து மாவட்டங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம்.

விண்ணப்பத்தை www.tabcedco.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின்னர் சமர்ப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:-

சாதிச் சான்றிதழ்

வருமானச் சான்றிதழ்

பிறப்பிடச் சான்றிதழ்

குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை 

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://tabcedco.tn.gov.in/WEB/EN/

Tags: தொழில் வாய்ப்பு முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback