Breaking News

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை! சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்

 

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (08-09-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு (08.09.2024 / 2330 மணி அளவில்) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை 08:30 மணி அளவில் பூரியிலிருந்து (ஒடிசா) 50 கீ.மீ கிழக்கு-தென் கிழக்கே, கோபால்பூரிலிருந்து (ஓடிசா) 140 கீ.மீ கிழக்கு-வட கிழக்கே, பாரதீப்பிலிருந்து (ஒடிசா) 90 கீ.மீ தென்மேற்கே, கலிங்கபட்டினத்திலிருந்து (ஆந்திரா) 260 கீ.மீ கிழக்கு-வட கிழக்கே நிலை கொண்டிருந்தது. அதன் பிறகு, இன்று (09-09-2024) நண்பகல் ஒடிசா கடற்கரையை, பூரிக்கு அருகில் கடந்தது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறையக்கூடும். 09.09.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். 10.09.2024: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11.09.2024 முதல் 15.09.2024 வரை; தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, நாமக்கல், சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback