Breaking News

ஆப்பிள் போன் அறிமுகப்படுத்தியுள்ள புதிய மாடல் 16 ,16+ விலை என்ன ,சிறப்பம்சங்கள் என்ன முழுவிவரம் iPhone 16 and iPhone 16 Plus Specifications

அட்மின் மீடியா
0

ஆப்பிள் நிறுவனம் உலகளாவிய சந்தைகளில் புதிய ஐபோன் 16 தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது

ஆப்பிள் நிறுவனம் நேற்று  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் குபெர்டினோவில் உள்ள ஆப்பிள் பூங்காவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரையரங்கில் நடத்திய ஆப்பிள் இட்ஸ் க்ளோவ்டைம் ஈவென்ட் 2024 (Apple Its Glowtime Event 2024) என்ற நிகழ்வில். iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro, மற்றும் iPhone 16 Pro Max என நான்கு போன்களை அறிமுகம் செய்தது  

ஆப்பிள் ஐபோன் 16, 6.1 இன்ச் டிஸ்ப்ளே உடனும், ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் டிஸ்ப்ளே உடனும் உருவாக்கப்பட்டு இருக்கிறது

ஐபோன் 16 சாதனம் 128GB, 256GB மற்றும் 512GB வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இதில் 5x Optical Zoom அம்சமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது!

மேலும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் AI அம்சத்துடன் வெளியாகும் முதல் போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஐபோன் 16 மாடல்களில் பக்கவாட்டில் பொருத்தப்பட்டு உள்ள, 'Camera control Capacitive Slider' என்ற அமைப்பு, ஐபோன் பிரியர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த Slider மூலம், கேமராவை Zoom, Click, On-Off செய்துகொள்ள முடியும். 

Apple Intelligence அம்சத்துடன் கேமராவும் ஒருகிணைக்கப்பட்டுள்ளதால், புகைப்படங்கள், வீடியோக்களை Al மூலம் நம் தேவைக்கேற்ப மாற்றியமைக்க முடியும்.

ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அட்வான்ஸ் கூலிங் செம்பரி கொண்டுள்ளன, இதனால் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் போனில் செயல்படுவதால் இந்த போன் சூடாகது

அதேபோல் சாட்டிலைட் மெசேஜிங் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், உங்கள் செய்திகளை மிகவும் பாதுகாப்பாக அனுப்பவும் பெறவும் முடியும். 

மேம்படுத்தப்பட்ட சாட்டிலைட் வசதி மூலம் துல்லியமாக பல்வேறு மேப் வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஐபோன் 16 சிறப்பம்சங்கள் என்ன :-

iPhone 16 Specifications

6.1" இன்ச் Super Retina XDR டிஸ்பிளே

2000 நீட்ஸ் பீக் பிரைட்னஸ்

1200x 2600 பிக்சல்

60Hz ரெஃப்ரஷ் ரேட்

 8GB ரேம் + 128GB / 256GB / 512GB ஸ்டோரேஜ்

பயோனிக் A18 சிப்செட்

ஆக்டா கோர் பிராசஸர

iOS v18 இயங்குதளம்

பில்ட் இன் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்

48MP + 12MP டூயல் கேமரா

12MP செல்பி கேமரா

3561mAh பேட்டரி

பாஸ்ட் சார்ஜிங்

20W ரிவர்ஸ் சார்ஜிங்

அமெரிக்க விலை

ஐபோன் 16 மாடலின் விலை $799 (இந்திய மதிப்பில் சுமார் ரூ .67,000) தொடக்க விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் ஐபோன் 16 பிளஸ் $899 (இந்திய மதிப்பில் சுமார் ரூ .75,500) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ஐபோன் 16 புரோ விலை 128 ஜிபிக்கு $999 (சுமார் ரூ .83,870), மற்றும் 256 ஜிபிக்கான ஐபோன் 16 புரோ மேக்ஸிற்கான $1199 (சுமார் ரூ .1 லட்சம்) என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் விலை என்ன:-

இந்தியாவில் ஐபோன் 16 விலை ரூ .79,900 எனவும், 

ஐபோன் 16 பிளஸ் ரூ .89,900 எனவும், 

ஐபோன் 16 புரோ, ரூ .1,19,900 எனவும் 

பிரீமியம், ஐபோன் 16 புரோ மேக்ஸ் ரூ .1,44900 எனவும் விற்பனையாகும்.

இந்தியாவில் ஐபோன் 16 சீரிஸ் முன்பதிவு செப்டம்பர் 13 அன்று மாலை 5:30 மணிக்கு தொடங்கும் என்றும் முதல் விற்பனை செப்டம்பர் 20 அன்று நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த 2 மாடல்களும் அல்ட்ரா மரைன், டீல், பிங்க், வெள்ளை, பிளாக் ஆகிய 5 நிறங்களில் வாங்க கிடைக்கிறது. 

இதன் முன்பதிவு செப்டம்பர் 13, 2024 ஆம் தேதி துவங்குகிறது. செப்டம்பர் 20, 2024 ஆம் தேதி முதல் இந்தியாவில் iPhone 16 மற்றும் iPhone 16 Plus  கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback