Breaking News

தமிழகத்தில் செப்டம்பர் 17 ம் தேதி மிலாதுன் நபி தலைமை காஜி அறிவிப்பு Announcement of Miladun Nabi Chief Qazi in Tamil Nadu on 17th September

அட்மின் மீடியா
0

தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளையே மிலாடி நபியாக கொண்டாடுகிறோம். முகம்மது நபி, கிபி 570 ம் ஆண்டு ரபி உல் அவல் மாதம் எனப்படும் இஸ்லாமிய நாட்காட்டியின் மூன்றாவது மாதத்தின் 12 ம் நாளில் மக்கா நகரில் அவதரித்தார். இந்த நாளையே மிலாடி நபியாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு மிலாடி நபி செப்டம்பர் 17 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

We celebrate the birthday of Prophet Muhammad as Milady Nabi. Prophet Muhammad appeared in the city of Makkah on the 12th day of the third month of the Islamic calendar known as the month of Rabi ul Awal in the year 570 AD. We celebrate this day as Milady Nabi. This year Milady Nabi is going to be celebrated on 17th September.



தமிழகத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்தது. ஆனால் நேற்று பிறை தெரியாததால் மிலாடி நபி பண்டிகையில் மாற்றம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

ஷரியத் அறிவிப்பு ஹிஜ்ரி 1446 சஃபர் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 04-09-2024 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. 

ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மீலாதுன் நபி செவ்வாய்க்கிழமை 17-09-2024 தேதி கொண்டாடப்படும். என தெரிவித்துள்ளார்

மேலும் முன்னதாக செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை  என தமிழ் காலண்டரில் உள்ளது மேலும்  அன்று அரசு விடுமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பால் விடுமுறையில் மாற்றம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மிலாதுன் நபி செப்டம்பர் 17 செவ்வாய் கிழமை ஆகும். எனவே இடையில் வரும் திங்கள் அன்று விடுமுறை எடுத்து கொண்டால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.

New Moon for the month of Rabiul Awwal 1446 Hijri was NOT SIGHTED.InshaAllah, 

1st Rabiul Awwal 1446 Hijri begins from 06-09-2024, Friday. 

Meelad un Nabi will be celebrated on 17-09-2024, Tuesday.TN Govt Chief Kazi OfficeRoyapettah, Chennai 14

Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்

Give Us Your Feedback