Breaking News

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரியில் 18ம் தேதி முழு அடைப்பு போராட்டம் இந்தியா கூட்டணி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரியில் 18ம் தேதி முழு அடைப்பு போராட்டம் Full shutdown protest in Puducherry on 18th to demand withdrawal of electricity tariff hike

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இம்மாதம் 18ம் தேதி முழு அடைப்புப் போராட்டத்துக்கு இண்டியா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, திமுக மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் தேவபொழிலன் மற்றும் சிபிஐ(எம்எல்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கடசி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரி பட்ஜெட்கூட்டத்தில் மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 18-ம் தேதி புதன்கிழமை இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெறக்கோரி வரும் 18-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம். மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். துணை மின் கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்இந்தப் போராட்டத்துக்கு புதுவை மக்கள் ஆதரவு தர வேண்டும் என்று கூறினர்.

Tags: புதுச்சேரி செய்திகள்

Give Us Your Feedback