ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை மீட்பு பணிகள் வீடியோ பார்க்க 2-year-old Falls in Borewell in Jodhpur, Rescue Operation
ராஜஸ்தானில், விளையாடிக் கொண்டிருந்தபோது போர்வெல்லில் தவறி விழுந்துள்ளார் 2 வயது பெண் குழந்தை. நேற்று மாலை 5 மணி அளவில் குழந்தை விழுந்த நிலையில், 35 அடி ஆழத்தில் சிக்கியுள்ளார் என கூறப்படுகிறது. 2-year-old Falls in Borewell in Jodhpur, Rescue Operation
அவரை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப்படையினருடன் இறங்கியுள்ளது மாவட்ட நிர்வாகம்.இந்நிலையில் மீட்புப்பணி தொடர்பான பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள பண்டிகுய் பகுதியில் புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி திறந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளார்
சம்பவம் அறிந்து விரைந்து வந்த ராஜஸ்தான்மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவற்றின் சிறப்புக் குழுக்கள் மீட்பு பணிகளை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது
சிறுமி ஆழ்துளை கிணற்றில் 35 அடி ஆழத்தில் சிக்கியுள்ளதாகவும், அவரை பத்திரமாக மீட்க மீட்பு குழுவினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர் மேலும் குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது
மீட்புபணி நடவடிக்கையை தௌசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார், காவல் கண்காணிப்பாளர் ரஞ்சிதா சர்மா மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகத்துடன் விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்
மீட்பு பணி வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1836597933929570318
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ