உத்தரப்பிரதேசத்தில் கொடூரம் பள்ளி பிரபலமாக வேண்டும் என 2 ம் வகுப்பு மாணவன் நரபலி 5 பேர் கைது - நடந்தது என்ன முழு விவரம் Class 2 Boy Sacrificed For School's Prosperity 5 Arrested
The Uttar Pradesh Police has arrested five people in the case – the school owner, Jasodhan Singh, director Dinesh Baghel, principal Laxman Singh, and two other teachers, Ramprakash Solanki and Veerpal Singh. An FIR has been registered against them under section 103 (1) of Bharatiya Nyaya Sanhita (BNS)
உத்தர பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில் தனியார் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளி ஆசிரியர்கள் நரபலி கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரசேத மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ராஸ்கவான் பகுதியில் டிஎல் பப்ளிக் பள்ளி என்ற தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி பிரபலம் ஆக வேண்டும் என்றால் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க வேண்டும் என்று யாரோ ஒருவர் சொன்னதை நம்பி அப்பள்ளி ஆசிரியர்கள் 2 ஆம் வகுப்பு மாணவனை நரபலி கொடுத்துள்ளனர்.
விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாக பெற்றோர்களுக்கு விடுதி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தபோது பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகேல் சிறுவனை தூக்கிக்கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட போது, குழந்தையின் உடல்நிலை மோசமாகி விட்டது, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என்றார்கள்
சிறுவனின் பெற்றோர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் பள்ளியின் இயக்குநர் தினேஷ் பாகேலின் காரை பிடித்துச் சோதனையில் ஈடுபட்ட போது சிறுவன் உயிரிழந்த நிலையில் காரில் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
போலீசார் விசாரனையில் சிறுவனை கழுத்தை நெரித்து நரபலி கொடுத்தோம் என ஒப்புகொண்டதை அடுத்து இந்த வழக்கில் பள்ளியின் இயக்குநர், அவரது தந்தை மற்றும் மூன்று ஆசிரியர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
Tags: இந்திய செய்திகள்