Breaking News

ஒடிசாவில் பரிதாபம் முதியோர் ஓய்வூதியம் வாங்க நடக்கமுடியாததால் 2 கிலோமீட்டர் தவழ்ந்து சென்ற மூதாட்டி வைரல் வீடியோ 80 year old woman was forced to crawl nearly 2 km to panchayat office

அட்மின் மீடியா
0

அரசு வழங்கும் ஓய்வூதியம் பெறுவதற்காக 80 வயதான மூதாட்டி 2 கிலோமீட்டர் தவழ்ந்து சென்றது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  80-year-old woman made to crawl 2km to collect pension in Odisha

80-year-old woman made to crawl 2km to collect pension
80-year-old woman made to crawl 2km to collect pension

ஒடிசா மாநிலம் கியான்ஜ்கர் பகுதியில் உள்ள ரைசுவான் கிராமத்தில் வசித்து வருபவர் 80 வயதான மூதாட்டி பதூரி இவர் உடல் நிலை காரணமாக நடைபயணிக்க முடியாமல் தவழ்ந்தே செல்கின்றார் 

இவர் மூத்த குடிமக்களுக்கான அரசு ஓய்வூதிய பணத்தை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ரைசுவான் கிராம பஞ்சாயத்து அதிகாரி இந்த மூதாட்டியை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்து பென்சன் தொகையை வாங்கி கொள்ளுமாறு கூறியுள்ளார்.இதனால் மூதாட்டி பதூரி, தனது வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் வரை தவழ்ந்து சென்று பென்ஷன் பணத்தை வாங்க கிளம்பியுள்ளார். 

இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து மூதாட்டியின் இந்த பயணம் மற்றும் முதியோர் பராமரிப்பு குறித்து அரசு தீவிரமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டதுடன் அந்த மாவட்ட BDO அதிகாரி அவரது வீட்டிற்கே சென்று பென்ஷன் பணத்தை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/adminmedia1/status/1839144848399507884

Give Us Your Feedback